மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ் சுகாதார சேவை, பொலிஸ் மற்றும் இராணுவம், அரச பிரிவின் அதிகாரிகள் அத்தியாவசிய பயணங்களில் ஈடுபட்டுள்ள போது, அத்தியாவசிய பொருள்களை விநியோகிப்போர், அத்தியாவசிய சேவை வழங்குனர்கள், குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்துக்காக ( சாட்சி தேவை), துறைமுகங்களுக்கு பொருள்களை கொண்டு செல்வோர்  (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்) ஆகியோருக்கே, மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.