யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன எனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா, தொடர்ந்து அடுத்து ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனா தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய  தேவை காணப்படுகின்றது என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்,  இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொற்றாளர்களின்  எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வர்ருவதாகவும் கூறினார்.

எனவே இந்த நோயின் தாக்கத்தில்  இருந்து விடுபடுவதற்கு முக்கியமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதுமுக்கியமாகும் என்று கூறிய அவர், “அத்தோடு, தடுப்பூசியினை கட்டாயமாக நீங்கள் பெற்றுக் கொள்வது சிறந்ததாக இருக்கும். அதேநேரத்தில் எமது வைத்தியசாலையில் இறந்தவர்களின் தரவை  பார்க்கும்போது அனைவரும் தடுப்பூசி பெறாதவர்களே ஆவர். எனவே தடுப்பூசி பெறுவதன் மூலம்  இறப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்றும் தெரிவித்தார்.