கொரோனா பாதிப்பு காரணமாக யாழ். நவாலி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10 குடும்பங்களுக்கு புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியின் மூன்றாம் கட்ட பணியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நவாலி பிரதேசத்தைச் சேர்ந்த கட்சியின் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் பகீரதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட் )யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன் அவர்கள் கட்சியின் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் செல்வி அவர்களிடம் நேற்று உலருணவுப் பொதிகளை கையளித்துள்ளார்.