ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 723 பேரில், 311 சந்தேகநபர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ. 365 மில்லியன் பணம் மற்றும் சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.