சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான், மாலைத்தீவு, வடகொரியா, கட்டார், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் சைனோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

மேலும் பல நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிடவில்லை என்பதுடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்த நாடுகளுக்கு உட்பிரவேசிக்க முடியும்.