2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளது.