பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று உத்தரவிட்டார்.

மேலும் ரிஷாட்டின் மனைவி மற்றும் மாமனார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார்.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான  உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மைத்துனர், சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்