மனிதாபிமான எதிர்பார்ப்புக்கள் உள்ளடங்கலாக, ஆப்கானிஸ்தானில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றது.

சர்வதேசப் பங்குதாரர்களின் உதவியுடன், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது பிரஜைகளை வெளியேற்றுவதில் இலங்கை உதவிகளை வழங்கி வருகின்றது. 2021 ஆகஸ்ட் 29 வரை, அறுபத்தாறு (66) இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதுடன், ஏழு (07) பேர் வெளியேற்றப்படவுள்ள அதே நேரத்தில், இருபத்தி ஒரு (21) இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதற்குத் தெரிவு செய்துள்ளனர்.

ஏனைய நாடுகளிலிருந்து பயண அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள அனைவரும் ஆப்கானிஸ்தானிற்கு வெளியே பயணங்களை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான முறையில் அனுமதிக்கப்படும் என இலங்கை எதிர்பார்க்கின்றது.