Header image alt text

நாட்டில் இதுவரை 11,879,851 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. Read more

நாட்டில் மேலும் 2,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 361,036 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். Read more

தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன்,  இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளார்.

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சராக, நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி பயணிப்பவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் மற்றுமொரு தடவை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அமைச்சுக்கள் சில கைமாற்றப்பட்டன. Read more

நாட்டில் மேலும் 2,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

இன்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லை என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். Read more

பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று (15) தெரிவித்தார். Read more