உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதம நீதியரசரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த குறித்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களான நியமிக்கப்பட்டுள்ளனர்.