02.09.1985 – 02.09.2021

தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும், மானிப்பாய் தொகுதியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிDPLF) ஆகியவற்றின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்றவர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்கள்!