இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2021) வியாழக்கிழமை காலை 08.30 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் க.தர்சன், உப தவிசாளர் பரமேஸ்வரலிங்கம், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கௌதமன், பிரதேச சபை உறுப்பினர்கள் அபராசுதன், அகீபன், திருமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.