நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(03) கூடிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று(03) மீண்டும் கூடிய கொரோனா தடுப்பு செயலணி, எதிர்வரும் 13 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது.