யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி பிற்போடப்பட்டுள்ளது.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் வெளிவாரி மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான திகதி ஏலவே தீர்மானிக்கப்பட்டு அதற்காக மாணவர்களால் இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இருந்த போதும் தற்போது நாட்டில் அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைத்து மாணவர்களையும் பூர்த்திசெய்யப்பட்ட வேண்டுகோள் படிவத்தினை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு திகதியும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொர்பான அனைத்து விபரங்களையும் திறந்த மற்றும் தொலைக்கல்வி இணையத்தள முகவரியான codl.jfn.ac.lk சென்று விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தலின் இணைப்பை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சமர்ப்பிப்பதற்கான முடிவுத் திகதி 13.9.2021 திங்கட் கிழமை வரை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விபரங்களை பெறுவோர் 021-2223612 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.