பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பிலான பரிந்துரைகளை எதிர்வரும் கொவிட் ஒழிப்பு விசேட குழுவில் முன்வைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இதுவரை இரண்டு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்கமைய, புத்திஜீவிகள் குழு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்று அவற்றையும் கொவிட் ஒழிப்பு விசேட குழுவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் இதன்போது கூறினார்.
குறித்த புத்திஜீவிகள் குழுவின் கூட்டம் அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளை திறக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.