குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய அலுவலகங்களின் செயற்பாடுகள் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த காரியாலயங்கள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே ​சேவைகள் முன்னெடுக்கப்படும். அதுவும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில் ஒரேநாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் பிரதான அலுவலகத்தில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.