மியான்மாருக்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய பேராசிரியர் நளின் டி சில்வா, தனது பதவியை, இன்று (16) இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை நாடு திரும்பிய அவர், தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இது குறித்து வெளிவிவகார அமைச்சிடம் வினவிய போது, அதற்கு பதிலளித்த, வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுகீஷ்வர குணரத்ன, பேராசிரியர் நளின் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு, அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்த கோரிக்கையை அரசு அங்கிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம், இலங்கை மீனவர்கள் குழு மியான்மார் பாதுகாப்புஅதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போது, அவர்களுக்காக தூதுவராக என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனது என்றும், எதனையும் செய்ய முடியாத தூதரகராக இருக்க நான் விரும்பவில்லை என்றும் அதனால் பதவியை இராஜினாமா செய்வதாகவும் நளின் டி சில்வா கூறியிருந்ததாகவும், வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மியான்மருக்கான இலங்கை தூதராக பேராசிரியர் நளின் டி சில்வா, கடந்த ஆண்டு செப்டெம்பர் 1ஆம் தேதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.