இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உட்பட எட்டு நாடுகள் நீக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க செயலாளர் Rt Hon Grant Shapps வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணி முதல் இது றடைமுறைக்கு வரவுள்ளது.

அதிகாரியின் தகவல் படி, பாகிஸ்தான், இலங்கை, ஓமான், பங்களாதேஷ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைதீவு ஆகிய எட்டு நாடுகள் இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது