கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஜப்பான் நீக்கியுள்ளது.

டெல்டா பிறழ்வையடுத்து  இந்தியா, மாலைத்தீவு, நேபால், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு ஜூன் மாதம் தொடக்கம் ஜப்பான் அரசு தடைவிதித்திருந்தது.

எனினும் நாளை தொடக்கம் அத்தடை நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் குறித்த நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வருகைத் தருபவர்களுக்கு விமானநிலையத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைக்கு மேலதிகமாக, 3 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.