உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தலைவரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை, ஒக்டோபர் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹதியாவின் விளக்கமறியவே நீடிக்கப்பட்டுள்ளது. அவருடன் இன்னும் அறுவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.