திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு  கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து மூவரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.