கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விதிகளை பின்பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தடுப்பூசி தொடர்பான சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுகாதார பிரிவுடன் கலந்தாலோசித்து அது மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.