இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த யோசனையை முன்வைப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப குழு கூட்டத்திலேயே இந்த  விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தை செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.