நாட்டைத் திறக்கும் போது சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸாக ஃபைசர் தடுப்பூசியை வழங்குவற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று விசேட வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பூசியால் கிடைக்கும் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்.

 ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், சினோஃபார்ம் தடுப்பூசி போடப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7 சதவீதமானோருக்கு நோய் எதிர்ப்பு இல்லை என்றும் இடைவெளியை நிரப்ப ஃபைசர் தடுப்பூசி சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றால் இறந்தவர்களில் 19 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் சிறப்பு வைத்தியர் சுட்டிக்காட்டினார்.