ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

இதேபோல ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி, 24.1 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

பசுமைக் கட்சியினர் தங்கள் கட்சி வரலாற்றில் சிறந்த முடிவை அடைந்தனர், 14.8 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

எனினும், அரசாங்கத்தை அமைக்க கூட்டணி உருவாக்கப்பட வேண்டும்.

ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு மூன்று கட்சிகள் தேவைப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.