தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையேயான சந்திப்பு ஒன்று இன்று மாலை 5.00 மணியளவில் கொழும்பில் உள்ள இரா. சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே உள்ள குழப்பங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருடனும் பேசி இது சம்மந்தமாக ஒரு சரியான முடிவை எடுப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவு ஒன்றை அடைவதை தான் விரும்பவில்லை ஆகவே தான் அதை கட்டாயமாக சரிப்படுத்துவதாகவும் இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.