ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில், பத்தாரமுல்லையில் உள்ள ஆட்பதிவு தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மாகாண அலுவலகங்களும், 4ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக தெரிவித்தார்.

இவ்வாற அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும், தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை மேலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மற்றும் பிரதேச செயலகம் ஊடாக அடையாள அட்டைப் பிரிவின் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அவர் கூறினார்.

மேலும், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட முகவரிக்கு, அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு, அஞ்சல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.