சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாட்டினால், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப்பேர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் SCFR 297/2021 செய்துள்ளனர்.
தங்களுடைய சட்டத்தரணி மொஹான் பாலேந்திரன் ஊடாக தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகிய இருவரும் இந்த வழக்கில் ஆஜராகுவர்.