இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர். நவராத்திரி விழாவில் பிரதமர் மஹிந்தவுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

இந்நிலையில், இலங்கை படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்​கேற்கும் நிகழ்வில் கலந்து​கொண்டு, ​தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது.