அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைக் கையளிக்கும் போது வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க ஒரு வழிமுறை அமைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் நெறிமுறைகளை சட்ட பூர்வமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைகுழுவின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டச் சீர்திருத்தம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்றத் தெரிவிக்குழு சந்திப்பிலேயே இவ்விடங்கள் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊடக அளவுகோல்களை மீறும் ஊடகங்களைக் கையாளும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தலைவர் நிமல் புஞ்சிஹேவா, பாராளுமன்றத் தெரிவிக்குழு சந்திப்புக்கு பின்னர் தெரிவித்தார்.

ஊடக அளவுகோல்களை பாராளுமன்றத்தில் அனுமதிக்காக சமர்ப்பிப்பது அவசியம் என்றும், தேர்தல் காலத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முறையான திட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.