கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பது தொடர்பில் கல்வியமைச்சு ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில், ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதியன்று பாடசாலைகளைத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

மாகாண சபைகளுக்கு கீழியங்கும் 200 மாணவர்களை குறைவாகக் கொண்ட பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.