பாராளுமன்ற பொதுமக்கள் கலரியைத் திறக்குமாறு ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாற்பது பின்வரிசை எம்.பிக்கள் கையெழுத்திட்ட கடிதம்  சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன்  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை விரைவில் திறக்க தீர்மானம் செய்துள்ளதால், பாராளுமன்றத்தின் பொது கலரியையும் திறக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.