எதிர்வரும் 21ஆம் திகதியன்று, 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், வடமாகாணத்தில், தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 680 பாடசாலைகள், எதிர்வரும்; 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளன என, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், ஆளுநர்களுடனான மெய்நிகர் இணையவழி ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

எனினும், திறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகள் தொடர்பான விவரம் குறித்து, இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.