13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக, இந்திய வௌியுறவு செயலாளரின் விஜயத்தை அடுத்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்யும் வகையில், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனவும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்திருந்தார்.