இவ்வருடம் நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பது அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடத்திட்டங்கள் நிறைவுச் செய்யப்படாமல் இருப்பதால், ​மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.