மறைந்த கழகத் தோழரின் மனைவியின் மருத்துவ செலவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர்களான தோழர்கள் சிவபாலன், வேந்தன் ஆகியோர் இம்மாதம் முதல் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்து, ரூபாய் 10,000/இன்று (08.10.2021) குறித்த தோழரது மனைவியின் கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடப்பட்டுள்ளது. அவர் குணமடையும் வரையில் தொடர்ந்து மாதாமாதம் மேற்படி உதவி வழங்கப்படுமென இரு தோழர்களும் தெரிவித்துள்ளனர்.