வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து,  அவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.