நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாவது டோஸுக்கு 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசி முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  சன்ன ஜெயசுமன கூறினார்.