கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, இன்று (10) பிற்பகல், குடும்பஸ்தர் ஒரவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

51 வயதுடைய இராமலிங்கம் புஸ்பராஜ் எனும் 6 பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நேற்று  (09) இரவு, வேலை முடித்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த குறித்த நபர், காணாமல் போயிருந்தார். இந்நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தருமபுரம் பொலிஸார் விசாரனைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.