பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 12 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதியொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதான கதிரவேலு கபிலன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர், PCR பரிசோதனைகளை அடுத்து நேற்று பிற்பகல் வௌியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.