கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 63 பேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அரச புலனாய்வு பிரிவின் திருகோணமலை அலுவலகம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தது.