கொழும்பு − பிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரிஸ்டல் வீதியிலுள்ள கட்டிடமொன்றின் 5 ஆவது மாடியிலுள்ள மலசல கூடத்தில் இருந்தே இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 176 ரவைகளும்,  9 மில்லிமீற்றர் துப்பாக்கிக்கு பயன்டுத்தப்படும் 29 ரவைகளும்  கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் இந்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.