உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில்,  கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தன்னுடைய வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி, மர்மான முறையில் தீப்பற்றியெறிந்து மரணமடைந்தமை தொடர்பிலான வழக்கில் 5 ஆவது பிரதிவாதியாக ரிஷாட் பதியுதீன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.