உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக 1987-ம் ஆண்டு முதன்முதலாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் ஒவ்வொரு ஆண்டும் ஓக்டோபர் 17ம் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்பு தினம கடைபிடிக்கப்படுகிறது. 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த வறுமை ஒழிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகின் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.