ஜனநாயக மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்கூட்டம் 2021-10-17 பிற்பகல் 2 மணியளவில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் து.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கட்சியின் அங்கத்துவப்படிவம் வழங்கப்பட்டு அங்கத்தவர்களின் அங்கத்துவம் புதுப்பிப்பதோடு புதிய அங்கத்தவர்களை இணைப்பது சம்பந்தமான விளக்கவுரை வாசித்து காட்டப்பட்டது.

கட்சியின் மாவட்ட அமைப்பை விரிவுபடுத்துவது பற்றி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது.

மேலும் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் முக்கிய விடயங்களாக பொருட்களின் விலையேற்றம், விவசாயிகளின் உரப்பிரச்சனை, கடற் தொழிலாளர்களின் தொழில் தொடர்பான பிரச்சனை போன்றவை முல்லை மாவடடத்தையும் மிக மோசமாக பாதித்திருப்பதால் எம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட கிளையின் ஆலோசனையின் பிரகாரம் இயங்குவதற்கு மகளிர் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டது. இதன் பிரகாரம் இன்று மாவடட கிளை உறுப்பினர்களின் முன்னிலையில் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மிக விரைவில் அங்குரார்ப்பணம் செய்துவைப்பதென தீர்மானிக்கப்பட்டது.