பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதாக வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்று (20) பல்வேறு ஊடகவியலாளர் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது கருத்து தெரிவித்த குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்க தலைவர் சரத் பிரேமசிறி, முடிந்தால் அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பளத்தை குறைக்க விடப்போவதில்லை என ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்