வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட கைதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். 15 கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறியதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கைதிகள் அமைதியின்மையை ஏற்படுத்தியதுடன், ஏனைய கைதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளை ஈடுபடுத்தி இன்று மதியம் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் தற்போது சிறைக்கூடத்தினுள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.