இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன.

ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன.

நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.