மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு தினத்தில், ஒரே தடவையில் நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய பிரேரணை முன்வைத்ததுள்ளது.

அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் தலைமையிலான பாராளுமன்ற விசேட குழு கூட்டத்திலேயே, ஜாதிக ஹெல உறுமய மேற்கண்டவாறு பிரேரணை முன்வைத்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கு 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் போது அது மூன்றில் ஒரு பங்காக உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அக்கட்சி குழுவில் சுட்டிக்காட்டியது.