வவுனியா மாவட்ட நிர்வாக கூட்டம் மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் தலைமையில் 24/10/2021 அன்று மாலை 4.30 மணிக்கு வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக 22/10/2021 அன்று மறைந்த எமது கட்சியின் செயலாளர் ஆனந்தி அண்ணாவிற்கான அஞ்சலி உடன் ஆரம்பமாகி மறைந்த தோழர்களினையும் நினைவு கூர்ந்து கூட்டம் ஆரம்பமானது.

தொடர்ந்து தலைமை உரையில் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் தெளிவூட்டியதுடன், covid_19 இடர் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறும் கூட்டம் எனினும் நாம் வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை ஆகியவற்றை எமது கட்சி நிர்வகிப்பதானாலும், ஏனைய சபைகளில் வலுவான உறுப்பினர்களுடன் நாம் மக்களுக்காக பணியாற்றி வருவதனால் அவற்றை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தினால் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அதில்
01) உறுப்பினர்களின் அங்கத்துவ விண்ணப்பம் தொடர்பான தெளிவுபடுத்தல் மற்றும் விரைவான செயற்குழு மூலம் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல்

02) வவுனியா மாவட்ட தோழர்களின் “அரசறிவியல் மாநாடு” நடாத்துதல்.

03) இளைஞரணி செயற்பாடுகளை விரிவாக்கல் , மகளீரணி விரிவாக்கம், தொழிற்சங்கங்கள் உருவாக்குவது தொடர்பான தீர்மானம்

04)மத்திய குழு கூட்டத்தை விரைவாக நேரில் நடாத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றல்

05) எதிர்கால தேர்தல்களிற்கான தயார்ப்படுத்தல்

நன்றி
சந்திரகுலசிங்கம் மோகன்
மாவட்ட அமைப்பாளர்
( PLOTE/DPLF )